ஒரு நாளைக்கு 20 யூனிட்கள் என 5 முறை இன்சுலின் செலுத்தி கொள்ள வேண்டும். எனினும் அவருக்கு சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கவில்லை. அவருக்கு சர்க்கரை அளவு மட்டும் அல்லாமல் ரத்த கொதிப்பும் அதிகமாகவே இருந்தது. கொலஸ்ட்ராலும் அதிகமாகவே இருந்தது. இதனால் அவரது சிறுநீரகம் பழுதடைந்து டயாலிசிஸ் செய்து கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்ற நிலை இருந்தது. இவர் ஒரு மாதத்திற்கு முன்னர் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சையை தொடங்கினேன்.

என்னுடன் பணிபுரிந்தவர்கள் எல்லாம் இவருடன் அட்டன்டர் இல்லாமல் உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டாம் என்றார்கள். ஆனால் நான் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக நான் தைரியமாக அவரை உள்நோயாளியாக சேர்த்தேன். கடந்த ஒரு மாதமாக அவருக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் அவரது மன அழுத்தத்தை குறைத்தோம்.

அவருடைய சர்க்கரையின் அளவை குறைப்பதில் நான் கவனம் செலுத்தினேன். இதனால் சர்க்கரையின் அளவை குறைப்பதன் மூலம் அவருக்கு சிறுநீரக பிரச்சினையை சரி செய்துவிடலாம் என நினைத்தேன். அவருக்கு தொடர்ந்து அளித்த சிகிச்சையால் அவரது கொலஸ்ட்ரால் அளவு குறைந்தது. சர்க்கரை அளவும் குறைந்ததால் அவருக்கு கொடுக்கப்படும் இன்சுலின் அளவை குறைத்தேன். வாரத்திற்கு ஒரு முறை அவருக்கு சர்க்கரை, யூரியா, கிரியாட்டினைன் உள்ளிட்டவற்றை செக் செய்தோம்.